தில்லியில் நடைபெற்ற புரோ மல்யுத்த லீக் ஏலத்தில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரரான சுஷில் குமார் அதிகபட்ச விலையான ரூ. 55 லட்சத்திற்கு டெல்லி சுல்தான்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
இதன்மூலம் அதிகபட்ச ஏல விலையைப் பெற்று இந்தப் போட்டியின் வரலாற்றில் சுனில் குமார் மிக அதிக விலையுயர்ந்த வீரரானார்.
பெண்கள் வரிசையில், ஹரியானா ஹாமர்ஸால் அணியால் 44 இலட்சத்துக்கு வாங்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த உலகச் சாம்பியன் தங்கப் பதக்க வீராங்கனையான ஹெலன் மரொலிஸ் (57 கி. எடைக்குட்பட்டோர் பிரிவு) அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
அடுத்து வரவிருக்கும் புரோ மல்யுத்த லீக் (PWL) போட்டியானது அதன் மூன்றாவது பதிப்பாகும். இதன் முதல் பதிப்பை ரெவன்டா மும்பை கருடாவும் இரண்டாவது பதிப்பை என்சிஆர் பஞ்சாப் ராயல்ஸ் அணியும் வென்றுள்ளது.
இரண்டு பதிப்புகளிலும் ஹரியானா ஹாமர்ஸ் இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் வெற்றி இலக்கை தொடர்ந்து தவறவிட்டது.