TNPSC Thervupettagam

புரோபா-3 செயற்கைக்கோள்

December 12 , 2024 10 days 80 0
  • இஸ்ரோ நிறுவனம் ஆனது, 'C-59' எனப்படும் தனது 61வது வணிக ரீதியிலான ஆய்வுப் பயணமான ஐரோப்பிய விண்வெளி முகமையின் PROBA-3 செயற்கைக்கோளை மிக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • PROBA-3 விண்கலத்தின் நோக்கம் ஆனது, சூரியனின் கரோனா அடுக்கு குறித்து முன்பு எப்போதும் மேற்கொள்ளப்படாத துல்லியமான ஆய்வினை மேற்கொள்வதாகும்.
  • இது துல்லியமான கட்டமைப்பு சுற்றுப் பயணத்தினை உருவாக்குவதற்காக வேண்டி வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் மில்லிமீட்டர் அளவு துல்லியத்துடன் சுமார் 150 மீட்டர் இடைவெளியைப் பேணும்.
  • அவை ஒன்றாக இணைந்து, விண்வெளி அறிவியலில் ஒரு தனித்துவமான நிகழ்வான செயற்கையான சூரிய கிரகணத்தை உருவாக்கும்.
  • இது இயற்கை கிரகணங்களின் குறுகிய காலத்தினை விட மிகவும் அதிகமாக நீண்ட காலத்திற்கு சூரியனின் கரோனா அடுக்கினை நன்கு ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பொதுவாக செயற்கைக்கோள்களால் இரண்டு வகையான வடிவங்கள் உருவாக்கப் படும்.
  • ஒரு நிலையான வடிவத்தில், இந்த விண்கலம் ஆனது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிலையான தொலைவினையும் நோக்குநிலையையும் பேணுகிறது.
  • மாறுநிலை வடிவத்தில், விண்கலம் ஆனது, விண்வெளியின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே இந்த விண்கலங்கள் நகர வேண்டிய ஆய்வுப் பகுதிகளின் அடிப்படையில் அவற்றின் தொடர்பு நிலைகளை மாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்