TNPSC Thervupettagam

புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை

October 20 , 2021 1041 days 595 0
  • கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் ஒரு குழுவானது புரோஸ்டேட் புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கு DLX1 மரபணு என்ற ஒரு புதிய இலக்கினை அடையாளம் கண்டுள்ளது.
  • புரோஸ்டேட் புற்றுநோயின் வளர்ச்சி மற்றும் உருவாக்கத்தில் DLX1 மரபணு ஒரு முக்கியப் பங்கினை வகிப்பதாக இந்தக் குழு கண்டறிந்துள்ளது.
  • அந்தக் குழுவானது புரதத்தை உருவாக்கும் DLX1 மரபணுவினை மரபணு ரீதியாக நீக்கிய போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, உருவாக்கம் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு பரவுதல் போன்ற திறன்களில் பாதிப்பு ஏற்பட்டது.
  • புரோஸ்டேட் புற்றுநோய் செல்களில் DLX1 மரபணுக்களின் அளவு அதிகரிப்பதற்கு ஆண்ட்ரோஜன் ஏற்பி மற்றும் இணைவு மரபணுப் பொருளான ERG ஆகியவையே காரணம் என இக்குழு மேலும் நிரூபித்துக் காட்டியது.
  • மேலும் புரோமோடோமைன் மற்றும் எக்ஸ்ட்ரா டெர்மினல் என்ற புரதமானது ஆண்ட்ரோஜன் ஏற்பி மற்றும் ERG ஆகிய இரண்டின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது எனவும் அக்குழு கண்டறிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்