மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோ ஆகியன மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய அரசியல் மற்றும் வர்த்தகக் குழுவான மேற்கு ஆப்பிரிக்காவின் கூட்டணியிலிருந்து (ECOWAS) அதிகாரப் பூர்வமாக வெளியேறியுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் ECOWAS கூட்டணியின் ஸ்தாபன உறுப்பினர்கள் ஆகும்.
புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகியவை தற்போது தங்கள் சொந்தக் கூட்டமைப்பான சஹேல் நாடுகளின் கூட்டணியை (AES) உருவாக்கியுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் பிரான்சுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை பெருமளவில் துண்டித்து, உதவிக்காக ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகியவற்றினை நாடியுள்ளன.