புறக் கருவி சார்ந்த குளிரூட்டல் அடிப்படையிலான ஸ்கிராம் ஜெட் சோதனை
January 29 , 2025 25 days 73 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, சமீபத்தில் இந்தியாவில் மிக முதல் முறையாக 120 வினாடிகளுக்கு மீயொலி வேகத்திலான எரிப்பு ராம்ஜெட் என்ஜினின் நிலம் சார் செயல்பாட்டுச் சோதனையை செயல் விளக்கிக் காட்டியது.
அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான மீயொலி வேகத்திலான எறிகணை வகைகளை உருவாக்குவதில் பாதுகாப்பு அமைச்சகம் (MoD) இதை ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறியுள்ளது.
மீயொலி வேகத்திலான எறிகணைகள் 'மாக் 5' எனும் ஒலியின் வேகத்தினை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் மேம்பட்ட ஆயுதங்களின் வகையாகும்.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், DRDO ஆனது ஐதராபாத்தில் மேம்பட்ட மீயொலி காற்றோட்டச் சோதனை ஊடக (HWT) மையத்தினைத் திறந்து வைத்தது.