TNPSC Thervupettagam

புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் - ஜனவரி 30

January 31 , 2023 571 days 604 0
  • உலக சுகாதாரச் சபையானது, 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று, ஜனவரி 30 தேதியினைப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினமாக அங்கீகரித்தது.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை மக்கள் மீது இந்த நோய்கள் ஏற்படுத்தும் பேரழிவு மிக்க தாக்கம் பற்றிய சிறந்த விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்நோய்களைக் கட்டுப்படுத்துதல், நீக்குதல் மற்றும் ஒழித்தல் ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு ஒன்றை விடுக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது, 20 நோய்களின் மாறுபட்ட வடிவங்களின் குழுவாகும் என்பதோடு, அவை பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன.
  • தென்கிழக்கு ஆசியப் பிராந்தியமானது உலகளவில் இரண்டாவது அதிக அளவில் புறக்கணிக்கப் பட்ட வெப்பமண்டல நோய்கள் பதிவினைக் கொண்டுள்ளது.
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் பகுதிகளில் உள்ள விளிம்பு நிலைச் சமூகங்களிடையே மிகவும் பொதுவாக காணப்படும் தொற்றுநோய்களின் குழு ஆகும்.
  • அவை வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவா மற்றும் ஒட்டுண்ணிப் புழுக்கள் போன்ற பல்வேறு நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்