பாஸ்போரின், சிஸ்டைன் மற்றும் தங்கம் (Ph-Cys-Au) ஆகியவற்றைப் பயன்படுத்தி இயல்புக்கு மாறான ஒளியியல் பண்புகளைக் கொண்ட ஒரு புதிய உயர் ஒளிரும் தன்மை கொண்ட பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இது நுரையீரல், வயிறு மற்றும் இதயத்தின் மீது நச்சு விளைவைக் கொண்டிருக்கும் MTX என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் அதிக அளவைக் கண்டறிவதற்கான ஒரு காட்சி வகை உணர்திறன் தளமாகப் பயன்படுத்தப்படலாம்.
அவை மனித உடலில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சிகிச்சையளிப்பு மருந்துகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும்.
மெத்தோட்ரெக்ஸேட் (MTX) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்து ஆகும்.
இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 10 µMக்கும் அதிகமான காணப்படும் MTX என்ற அளவானது, 10 மணி நேரத்திற்கும் மேலாக இரத்த அமைப்பில் இருந்தால் ஆபத்தானது ஆகும்.
இது நுரையீரல் மற்றும் வயிற்றில் உள்ள புண்கள் ஆகியவற்றில் மிகப்பெரும் நச்சு விளைவுகளையும் மாரடடைப்பையும் ஏற்படுத்தும்.