தற்போதுள்ள சிகிச்சைகளுக்கு எதிர்ப்புத் திறனை உருவாக்கும் தன்மை கொண்ட நோய்ப் பதிப்பு கொண்ட நோயாளிகளுக்குப் பயன் தரும் புற்றுநோய் சிகிச்சைக்கான நம்பிக்கைக்குரிய புதிய இலக்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அறிவியலளர்கள், ஒரு புதிய கூட்டு சிகிச்சைக்கு அவசியமானதாக விளங்கக் கூடிய TDP1 எனப்படும் டிஎன்ஏ பழுதுபார்க்கும் நொதி மீது கவனம் செலுத்தினர்.
தற்போதைய புற்றுநோய் மருந்துகளான கேம்ப்டோதெசின், டோபோடோகன் மற்றும் இரினோடெகன் ஆகியவை டிஎன்ஏ பிரதியெடுப்பிற்கு வேண்டி மிகவும் முக்கியமான டோபோயிசோமரேஸ் 1 (Top1) என்ற நொதியைக் குறிவைக்கின்றன.
எனினும், புற்றுநோய் செல்கள் பெரும்பாலும் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறனை உருவாக்குகின்றன.
ஆனால் இந்த பழுதுபார்க்கும் செயல்பாட்டில் சைக்ளின்-சார்ந்த கைனேஸ் 1 (CDK1) மற்றும் டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டெரேஸ் 1 (TDP1) ஆகிய இரண்டு புரதங்கள் திறம்படச் செயல்படுகின்றன.