TNPSC Thervupettagam

புற்றுநோய் சிகிச்சைக்கான மேம்பட்ட நீர் ஏற்புப் பலபடிச் சேர்மம்

February 23 , 2025 11 hrs 0 min 22 0
  • கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் கொல்கத்தாவின் போஸ் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இடம் சார்/உறுப்பு சார் புற்றுநோய் சிகிச்சைக்காக ஒரு மேம்பட்ட ஊசி வழி உட்செலுத்தக் கூடிய நீர் ஏற்புப் பலபடிச் சேர்மத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த நீர் ஏற்புப் பலபடி சேர்மம் ஆனது, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மருந்துகளை உடலில் வெளியிடச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதோடு, புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான மிக நிலையான ஒரு தேக்க மையமாகச் செயல்படுகிறது.
  • இந்த நீர் ஏற்புப் பலபடிச் சேர்மம் ஆனது புற்றுநோய்க் கட்டி உள்ள பகுதிக்கு மட்டுமே துல்லியமாக மருந்துகளை வழங்குவதால் நேரடி உறுப்பு சார் செயல்பாட்டை உறுதி செய்கிறது.
  • நீர் ஏற்புப் பலபடிச் சேர்மங்கள் என்பவை நீர் சார்ந்த, முப்பரிமாண பலபடிச் சேர்ம வலையமைப்புகள் ஆகும் என்பதோடு அவை திரவங்களை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவை.
  • அவற்றின் தனித்துவமான அமைப்பு ஆனது, உயிருள்ளத் திசுக்களை ஒத்திருப்பதால், அவை உயிரி மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்