TNPSC Thervupettagam

புற்றுநோய் மருந்து உற்பத்திக்கு தாவர செல்களின் பயன்பாடு

January 9 , 2024 321 days 268 0
  • மண்டி மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், கேம்ப்டோதெசின் (CPT) எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தாவர செல்களில் வளர்சிதை மாற்றக் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளனர்.
  • இந்த நவீன கால மருத்துவ முறையின் மருந்து ஆனது நாதாபோடைட்ஸ் நிம்மோனியானா என்ற உள்நாட்டு, அழிந்து வரும் தாவரத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப் படுகிறது.
  • 1 டன் கேம்ப்டோதெசின் தயாரிக்க சுமார் 1,000 டன் தாவரம் தேவைப்படுகிறது.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் ஆனது, இந்தத் தாவரத்தைச் செந்நிறப் பட்டியலில் சேர்த்துள்ளது.
  • கடந்தப் பத்தாண்டுகளில் மட்டும் இந்தத் தாவரங்களின் எண்ணிக்கையில் 20% சரிவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்