இந்தியாவின் முதல் CAR-T செல் சிகிச்சையின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் சுமார் 73 சதவீத நோயாளிகளில் சாதகமாக செயலாற்றியுள்ளன.
இந்தியாவில் இருந்து சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட CAR-T செல் சிகிச்சையின் முதல் மருத்துவப் பரிசோதனை இதுவாகும்.
CAR-T செல் சிகிச்சை அல்லது சைமெரிக் ஆன்டிஜென் ஏற்பி T-செல் சிகிச்சை ஆனது புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்க உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களைப் பயிற்றுவிக்கிறது.
இந்தச் சிகிச்சையானது, ஒரு குறிப்பிட்ட வகையான இரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக என்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இந்தச் சிகிச்சையானது புற்றுநோய்ப் பாதிப்பு மீண்டும் வந்த அல்லது முதல்முறையிலான ஒரு சிகிச்சைக்குப் பலனளிக்காத நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
எந்தவொரு CAR-T செல் சிகிச்சைக்கும், ஒரு நோயாளியின் நோயெதிர்ப்பு T-செல்கள் அவர்களின் இரத்தத்தை வடிகட்டுவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
இந்தச் செல்கள் பின்னர் புற்றுநோய் செல்களுடன் பிணைக்கக் கூடிய ஏற்பிகளைச் சேர்ப்பதற்காக ஓர் ஆய்வகத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
இந்த செல்கள் பின்னர் பெருக்கப்பட்டு நோயாளிக்குள் செலுத்தப்படுகின்றன.