புலம்பெயர் உயிரினங்களுக்கான கருத்தரங்கின் (CMS) 12வது குழுக் கூட்டம்
October 30 , 2017 2630 days 956 0
CMS-Convention on the Conservation of Migratory Species of Wildlife
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் புலம்பெயர் உயிரினங்களுக்கான பான் உடன்படிக்கையின் (Bonn Convention) உறுப்பு நாடுகளின் 12வது குழுக் கூட்டம் நடைபெற்றது.
இம்மாநாட்டின் கருப்பொருள் – “அவர்களின் எதிர்காலமே நமது எதிர்காலம் – வனஉயிர் மற்றும் மக்களுக்கான நீடித்த வளர்ச்சி”.
இம்மாநாடு நீடித்த வளர்ச்சி இலக்குகளோடு (SDG- Sustainable Development Goal ) தொடர்புடையது ஆகும்.
இம்மாநாட்டின் படி பின்வரும் நான்கு ஆசியவகை கழுகினங்கள் அதிகப் பாதுகாப்பினைப் பெற உள்ளன.
செந்தலைக் கழுகு (Red Headed vulture)
பிணந்தின்னிக் கழுகு (White Rumped Vulture)
இந்தியவகைக் கழுகு (Indian Vulture)
மெல்லிய அலகினக் கழுகு (Slender Billed Vulture)
இந்தியப் பெருங்கடலில் வாழும் பெருஞ்சுறாவும் (Whale Shark) சர்வதேசப் பாதுகாப்பினைப் பெற்றிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய உள்நிலக் கடலில் வாழும் ஒரே கடற்பாலூட்டியான காஸ்பியன் நீர்நாயை (Caspian Seal) பாதுகாப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை மீதான மாநாட்டின் அடுத்தக் கூட்டம் 2020ல் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது.
பான் உடன்படிக்கையின் உறுப்பினர்கள் மாநாடு (COP) ஆசியாவில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.
பான்உடன்படிக்கை (Bonn Convention)
புலம்பெயரும் வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கையே பான் உடன்படிக்கை எனப்படும்.
இது ஒரு ஐக்கிய நாடுகள் சுற்றுச் சூழல் திட்டத்தின் (UNEP-United Nations Environment Programme) கீழ் வரக்கூடிய சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும்.
இந்தியா இந்த உடன்படிக்கையின் உறுப்பு நாடாகும்.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளாக இல்லை.