TNPSC Thervupettagam

புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு வாக்குச் சாவடிகள்

April 18 , 2024 223 days 282 0
  • தொண்ணூறுகளில் காஷ்மீரில் இருந்து ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய பகுதிகளுக்கு புலம் பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான ஆவணப் பதிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) எளிதாக்கியுள்ளது.
  • இந்தப் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் முக்கியமாக புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • காஷ்மீரில் இருந்து ஜம்மு, உதம்பூர் அல்லது டெல்லியில் உள்ள வாக்குச் சாவடிக்கு தங்கள் வாக்குகளை மாற்றக் கோருவதற்கு அவர்கள் முன்னதாக அதற்கான படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது.
  • ஜம்மு மற்றும் உதம்பூருக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து படிவம்-M உடன் இணைக்கப்பட்ட சுய-சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ள ப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
  • இதற்காக அரசு அதிகாரியின் சான்றளிப்பு நிலை பெற வேண்டியத் தேவையை இது நீக்கியது.
  • இரு பிராந்தியங்களிலும் உள்ள புலம் பெயர்ந்த வாக்காளர்களுக்காக என்று 22 சிறப்பு வாக்குச் சாவடிகளை (ஜம்முவில் 21 மற்றும் உதம்பூரில் 1) அமைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்