ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் புலம்பெயரும் வழித் தடங்களில் உலகளவில் குறைந்தபட்சம் 8,565 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இது குறித்த பதிவுகள் தொடங்கப் பட்டதிலிருந்து 2023 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் புலம்பெயர்தலின் போது பதிவான முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையினை (8,084 பேர்) முறியடித்தது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து தெற்கு ஐரோப்பாவை அடைய புலம் பெயர் நபர்கள் முயற்சிக்கும் மத்தியத் தரைக் கடல் பகுதியானது, புலம்பெயர்ந்தோருக்கு ஆபத்தான பாதையாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.