கடந்த பத்தாண்டுகளில் (2014 ஆம் ஆண்டு முதல்) உலகெங்கிலும் புலம்பெயர் பாதைகளில் 63,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் அல்லது காணாமல் போயினர்.
இதன்படி குறைந்தது 63,285 பேர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் மற்றும் இறந்ததாகக் கருதப்பட்டனர்.
2023 ஆம் ஆண்டில் 8,500 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36,000 என்ற அளவைத் தாண்டியதுடன் ஆவணப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளில் சுமார் 60 சதவிகிதம் ஆனது நீரில் மூழ்கி இறந்த நிகழ்வுகளுடன் தொடர்புடையது.
கடலில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 27,000க்கும் மேற்பட்டவை மத்தியத் தரைக் கடலில் நிகழ்ந்தன.
மத்தியத் தரைக் கடலின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த பெரும்பாலான உயிரிழப்புகள் லிபியாவின் கடற்கரையில் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டில் துனிசியக் கடற்கரையில் குறைந்தது 729 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற நிலையில் இது முந்தைய ஆண்டில் 462 ஆக இருந்தது.