TNPSC Thervupettagam

புலம்பெயர்வு மீதான கம்பாலா அமைச்சர்கள் பிரகடனம்

September 2 , 2023 322 days 182 0
  • மொத்தம் 48 ஆப்பிரிக்க நாடுகள் தற்போது புலம்பெயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் (KDMECC) மீதான கம்பாலா அமைச்சர்கள் பிரகடனத்தை ஏற்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது ஆப்பிரிக்க கண்டத்தில் மக்களின் புலம்பெயர்வு மற்றும் பருவநிலை மாற்றத்தின் தொடர்பை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய சில உலக கண்டங்களில் ஆப்பிரிக்காவும் ஒன்றாகும்.
  • KDMECC ஆனது முதலில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உகாண்டாவின் கம்பாலா என்னுமிடத்தில் 15 ஆப்பிரிக்க நாடுகளால் கையெழுத்திடப்பட்டு ஒப்புக் கொள்ளப் பட்டது.
  • இந்தப் பிரகடனமானது பருவநிலையால் தூண்டப்பட்டப் புலம்பெயர்வினை, அதன் நடைமுறை மற்றும் பயன்மிகு முறையில் நிவர்த்தி செய்வதற்காக என்று உறுப்பினர் நாடுகளின் தலைமையில் உருவாக்கப்பட்ட முதல் விரிவான, நடவடிக்கை சார்ந்த ஒரு கட்டமைப்பாகும்.
  • கடந்த ஆண்டு மட்டும் 7.5 மில்லியனுக்கும் அதிகமான புதிய உள்நாட்டுப் பேரிடர் சார்ந்தப் புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்