TNPSC Thervupettagam

புலி மீதான சட்ட விரோத வர்த்தகம்

August 23 , 2019 1794 days 616 0
  • சுற்றுச்சூழல் குறித்த ஒரு அரசு சாரா அமைப்பான டிராபிக் அமைப்பின் ஒரு புதிய அறிக்கையானது, 2000 மற்றும் 2018 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 19 ஆண்டுகளில் புலிகள் மற்றும் புலிகள் உறுப்புகள் மீதான சட்டவிரோத வர்த்தகத்தை அளவிட்டுள்ளது.
  • வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தத்தின் (CITES -  Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பட்டியல் - Iல் புலிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் சமீப காலங்களில் புலிகளின் பல்வேறு உறுப்புகளின் தேவைக்காக அவைகள் கையகப்படுத்தப்பட்டு இனவிருத்தி செய்யப் படுவது அதிகரித்துள்ளது.
  • CITES ன் பட்டியல் Iல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விலங்குகளின் வணிகம் சார்ந்த சர்வதேச வர்த்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
  • அதிக எண்ணிக்கையிலான விலங்குகளின் உடல் உறுப்பு பறிமுதல் நிகழ்வுகளில் இந்தியா (625), சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
  • விலங்குகளின் பல்வேறு உடல் உறுப்புகள் பறிமுதலில், புலிகளின் தோல் (38%) எலும்புகள் (28%), நகங்கள் மற்றும் பற்கள் (42%) ஆகியவற்றைப் பறிமுதல் செய்த நாடுகளில் இந்தியாவின் பங்கு அதிகமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்