சுற்றுச்சூழல் குறித்த ஒரு அரசு சாரா அமைப்பான டிராபிக் அமைப்பின் ஒரு புதிய அறிக்கையானது, 2000 மற்றும் 2018 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 19 ஆண்டுகளில் புலிகள் மற்றும் புலிகள் உறுப்புகள் மீதான சட்டவிரோத வர்த்தகத்தை அளவிட்டுள்ளது.
வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தத்தின் (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பட்டியல் - Iல் புலிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் சமீப காலங்களில் புலிகளின் பல்வேறு உறுப்புகளின் தேவைக்காக அவைகள் கையகப்படுத்தப்பட்டு இனவிருத்தி செய்யப் படுவது அதிகரித்துள்ளது.
CITES ன் பட்டியல் Iல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விலங்குகளின் வணிகம் சார்ந்த சர்வதேச வர்த்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான விலங்குகளின் உடல் உறுப்பு பறிமுதல் நிகழ்வுகளில் இந்தியா (625), சீனா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
விலங்குகளின் பல்வேறு உடல் உறுப்புகள் பறிமுதலில், புலிகளின் தோல் (38%) எலும்புகள் (28%), நகங்கள் மற்றும் பற்கள் (42%) ஆகியவற்றைப் பறிமுதல் செய்த நாடுகளில் இந்தியாவின் பங்கு அதிகமாகும்.