TNPSC Thervupettagam

புலிகளின் முக்கியமான 32 பெருவழிப் பாதைகள் – கண்டுபிடிப்பு

December 10 , 2019 1685 days 579 0
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது (National Tiger Conservation Authority - NTCA), “ஒரு நீண்டகால பாதுகாப்பிற்காக புலிகளை இணைத்தல்” என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • NTCA ஆனது டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்குப் பயிற்சி நிறுவனத்துடன் (WII - Wildlife Institute of India) இணைந்து இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆவணமானது புலிகளின் முக்கியமான 32 பெருவழிப் பாதைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் புலிகளின் பாதுகாப்புத் திட்டத்தை விவரிக்கின்றது.
  • 2006 ஆம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் 6 % என்ற அளவில் அதிகரித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்