TNPSC Thervupettagam

புலிகள் கடக்க சூழலியல் பாலம்

July 18 , 2017 2540 days 1085 0
  • தெலுங்கானா மாநிலத்தில் புலிகள், கால்வாயைக் கடந்து செல்ல ஏதுவாக சூழலியல் பாலம் (Eco - bridge) அமைக்கப்பட இருக்கிறது.
  • மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ததோபா - அந்தாரி புலிகள் காப்பகத்துக்கும் (Tadoba - Andhari Tiger Reserve - TATR) தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குமரம் பீம் ஆசிப்பாத் மாவட்டத்திற்கும் இடையே கால்வாய் உள்ளது. இதனால் ஒதுக்கப்பட்டக் காடுகள் (Reserve Forest) பிளவுபடுகின்றன. புலிகளால், பிளவுபட்ட வெவ்வேறு காட்டுப் பகுதிகளுக்குச் சென்று வர முடிவதில்லை.
  • இந்தச் சூழலியல் பாலத்தில் வளமான மண் கொட்டப்பட்டு செடிகளும் புற்களும் வளர்க்கப்பட்டு காடு போன்ற தோற்றமளிக்க வேண்டும்.
  • பெஜ்ஜீர், தஹிகான் மண்டலத்தில் (Bejjur and Dahegaon) பிரனகிதா தடுப்பணையின் (Pranahita Barrage) வலது கால்வாயின் 72 கிலோ மீட்டர் நெடுக முக்கியமான இடங்களில் இவ்வகைப் பாலங்கள் கட்டப்பட உள்ளன.
  • பெஜ்ஜீர் வன வரம்பில் சுல்குபல்லி (Sulgupalli) என்ற இடத்தில் கால்வாயின் அகலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் உள்ளது. இங்கு அமையவிருக்கும் பாலம் வன விலங்குகள் கடந்து செல்ல போதுமான அளவு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • தெலுங்கானா நீர்ப்பாசனத் துறை (Telangana Irrigation Department) இந்தச் சூழலியல் பாலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலத்தின் அளவு மற்றும் இடத்தை (தேசிய வனவிலங்கு வாரியம்) பரிந்துரை செய்ய காத்திருக்கின்றது.
  • பிரனகிதா ஆறு
  • பிரனகிதா நதியானது கோதாவரி நதியின் மிகப்பெரும் கிளை நதி ஆகும். பெண் கங்கா, வார்தா மற்றும் வயின்கங்கா நதிகளின் தண்ணீரோடு சேர்ந்து பிரனகிதா ஆறு கோதாவரியின் 34% வடிநிலப் பகுதிக்குப் பங்களிக்கிறது.
  • விதர்பா பகுதிகள் மற்றும் தெற்கு சாத்புரா மலைப் பகுதிகளில், பிரனகிதா ஆறு பாய்கிறது.
  • மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்திற்கும் , தெலுங்கானாவில் உள்ள அடிலாபாத் மாவட்டத்திற்கும் இடையேயான எல்லையில் பிரனகிதா ஆறு ஓடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்