ராஜஸ்தானில் உள்ள கோட்டாவின் முகுந்த்ரா குன்றுகள் புலிகள் காப்பகம் மற்றும் பன்டி எனுமிடத்தில் உள்ள ராம்கர் விஷ்தாரி புலிகள் காப்பகம் ஆகியவற்றினுள் தலா ஒரு பெண் புலி விடுவிக்கப் பட உள்ளன.
இந்த இரண்டு புலிகள் தவிர, காட்டெருது மற்றும் காட்டு நாய்கள் மற்றும் வேறு சில வன விலங்குகளும் இந்தக் காப்பகப் பகுதியில் விடப்படும்.
இந்தப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதற்காகவும் வேண்டி இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது.