புலிகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் பழங்குடியினர் இடம்பெயர்வு
August 5 , 2024 113 days 206 0
உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வுக் குழு (RRAG) ஆனது, பழங்குடியினர் மற்றும் காடுகளில் வாழும் சமூகங்கள் மீது புலிகளின் வளங்காப்புத் திட்டத்தினால் ஏற்படும் தாக்கத்தினை வெளிக் கொணரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“India’s Tiger Reserves: Tribals Get Out, Tourists Welcome” என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புலிகளின் வளங்காப்பு திட்டங்களால் 5.5 லட்சம் பேர் இடம் பெயர்த்தப் படுவதற்காக அடையாளம் காணப் பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மத்திய அரசின் கூற்றுப்படி 92,605 பேரை உள்ளடக்கிய சுமார் 20,857 குடும்பங்கள், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இடம் பெயர்த்தப் பட்டனர்.
எனவே, சுமார் 457,394 நபர்கள் அல்லது 1,03,016 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.
செலவினத்தின் அடிப்படையில், அவர்களின் மறுகுடியேற்றத்திற்கான மாபெரும் நிலத்தின் தேவைக்கு வேண்டி கூடுதலாக 15,2766 மில்லியன் அல்லது 1,853 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.
50 புலிகள் வளங்காப்பகங்களில் இருந்து 1973 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 2,54,794 பேர் இடம் பெயர்த்தப் படுவதற்காக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கப்படும் ஆறு புலிகள் வளங்காப்பகங்களில் இருந்து சுமார் 290,000 பேர் இடம் பெயர்த்தப் பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலக் கட்டத்தில் ஒரு புலிகள் வளங்காப்பகத்திற்கு 967% என்ற வீதத்தில் இடம் பெயர்வு அதிகரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் தமிழ்நாடு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் வளங்காப்பகத்திலிருந்து 4,000 பேர், ராஜஸ்தானின் ராம்கர் விஷ்தாரி புலிகள் வளங்காப்பகத்திலிருந்து சுமார் 4,400 பேர் என மொத்தம் 2.9 லட்சம் பேர் இடம் பெயர்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதாக அறிக்கை கூறுகிறது.