புலிகள், வேட்டை இனங்கள் மற்றும் பிற பாலூட்டிகளின் நிலை – 2024
March 30 , 2025 3 days 31 0
ஆந்திரப் பிரதேசம் நல்லமலை வனப்பகுதியில் உள்ள நாகார்ஜுனா சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகத்தில் (NSTR) 2023 ஆம் ஆண்டில் 74 ஆக இருந்த பெரும்பூனை இனங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 76 ஆக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், அந்த வளங்காப்பகத்தில் 47 புலிகள் இருந்த நிலையில் இது கடந்த ஆறு ஆண்டுகளில் 61.7 சதவீத அதிகரிப்புடன் 76 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக அரசு மேற்கொண்ட 2024 ஆம் ஆண்டு நான்காம் கட்ட கண்காணிப்பின் படி, கர்நாடக மாநிலத்தின் ஐந்து புலிகள் வளங்காப்பகங்களில் (பந்திப்பூர், நாகர்ஹோல், பிலிகிரி ரங்கநாதசுவாமி கோவில், பத்ரா மற்றும் காளி புலிகள் காப்பகம்) 393 புலிகள் உள்ளன.
2023 ஆம் ஆண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில், கர்நாடக மாநிலத்தில் 408 புலிகள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 417 ஆகவும், 2018 ஆம் ஆண்டில் 472 ஆக பதிவானது.