இந்தப் பகுதியில் உள்ள எலுமிச்சைப் பண்ணைகள் விலங்குகளின் தாக்குதல்களில் இருந்து மிகப் பாதுகாப்பாக உள்ளன என்பதோடு அவற்றின் உற்பத்தியும் இங்கு மிக அதிகமாக உள்ளது.
1950 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், புளியங்குடி பகுதியின் விவசாயிகள் ஒரு புதிய முயற்சியினை முன்னெடுத்து, அதன் மூலம் எலுமிச்சைச் சாகுபடியை மேற்கொள்ள முடிவு செய்தனர்.
இந்த மாற்றம் தான் புளியங்குடியினை ‘இந்தியாவின் எலுமிச்சை நகரம்’ என்பதாக மாற்றியது.
மிக அதிகளவிலான சிட்ரஸ் தன்மை மற்றும் ஏராளமான சாறு நிறைந்ததாகவும் உள்ள புளியங்குடி எலுமிச்சை ஆனது நறுமணம் கொண்ட மெல்லியத் தோலைக் கொண்டது.
PKM 1 என அழைக்கப்படும் இந்த பழங்கள் ஆனது, 100 கிராம் பழச்சாறுக்கு 34.29 மில்லி கிராம் என்ற மிக அதிக அஸ்கார்பிக் அமில உள்ளடக்கம் மற்றும் 8.0° பிரிக்ஸ் என்ற அளவில் மொத்தக் கரையக்கூடிய திடப்பொருட்களைக் கொண்டுள்ளன.
இந்தப் பழத்தில் காணப்படும் சாறு உள்ளடக்கம் ஆனது, எடையின் அடிப்படையில் 52.3% ஆக உள்ளது என்பதோடு இது அதிக மகசூல் தரும் எலுமிச்சை வகையாகும்.
தமிழ்நாடு மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் மற்றும் மேலப் புளியங்குடி விவசாயிகள் சங்கம் ஆகியவை புளியங்குடி தேசிக்காய் /அமில எலுமிச்சைக்குப் புவி சார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளன.