TNPSC Thervupettagam

“புளு பிளாக்” திட்டம்

December 27 , 2017 2395 days 771 0
  • நாட்டிலுள்ள கடற்கரைகளின் தூய்மையுடைமையின் தரத்தினை மேம்படுத்துவதற்காக “புளு பிளாக்“ (Blue Flag) எனும் முன்னோட்ட சோதனைத் திட்டத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • கடற்கரைகளின் தூய்மைத் துப்புரவுடைமையின் தரத்தினையும், அவை பாதுகாப்பாக பேணப்படுவதையும், மேலும் கடற்கரைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும் இத்திட்டம் முதன்மை நோக்கங்களாகக்  கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் கடலோர பகுதிகளுடைய அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், அவற்றினுடைய கடற்கரைகளில் தலா ஓர் கடற்கரையை தேர்ந்தெடுத்து அதனை பிரதிநிதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
  • தற்போது நடப்பில், செயல்பாட்டில் இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தினுடைய ஒருங்கிணைக்கப்பட்ட கடலோர மேலாண்மை திட்டத்தின் மூலம் (Integrated Coastal Management Programme) இந்திய கடலோர மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கடற்கரைகளுக்கு   நிதியளிக்கப்பட்டு, அங்கு மேற்கூறிய முதன்மை நோக்கங்களை  அடைவதற்கு வேண்டிய   நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இந்தியாவில் குஜராத், கர்நாடகம், கோவா, கேரளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கடற்கரைகள் உள்ளது.
  • பாண்டிச்சேரி, டையூ மற்றும் டாமன், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற யூனியின் பிரதேசங்களில் கடற்கரைப் பகுதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்