புளூட்டோவின் மலைகளுக்கு டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹிலாரி பெயர்கள் சூட்டல்
September 11 , 2017 2762 days 1004 0
சர்வதேச வானவியல் அமைப்பு, புளூட்டோ கிரகத்தில் உள்ள இரண்டு மலைத் தொடர்களுக்கு டென்சிங் நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி ஆகியோரின் பெயர்களைச் சூட்டியுள்ளது.
ஜீலை 2015ல் புளூட்டோவிற்கு மிக அருகில் நியூ ஹாரிஜான் என்ற விண்கலம் பறந்த பின் அக்கிரகத்தில் பெயரிடப்பட்ட முதல் நில அமைப்புகள் இவையே ஆகும்.
புளூட்டோவில் உள்ள நில அமைப்புகளுக்கு அலுவல் ரீதியில் பெயரிடுவதற்கு சர்வதேச வானவியல் அமைப்பின் கோள்களுக்கு பெயரிடுதலின் செயற்குழு ஒப்புதலளிப்பது இதுவே முதல்முறையாகும். சர்வதேச வானவியல் நிறுவனம் விண்கோள்களுக்கும் அவற்றின் நில அமைப்புகளுக்கும் பெயரிடுவதற்குச் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.
முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி வெற்றிகரமாக திரும்பிய டென்சிங் நார்கே (1914 – 1986) என்ற இந்திய – நேபாளி ஷெர்பாவையும் எட்மண்ட் ஹிலாரி என்ற நியூலாந்து நாட்டவரையும் பெருமைப்படுத்தும் வகையில் இம்மலைகளுக்கு அவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.