TNPSC Thervupettagam

புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீடு 2018

April 20 , 2018 2313 days 750 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள்   குறியீட்டில் (Bloomberg Billionaires Index 2018) 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து (Net worth) மதிப்பினைக் கொண்டு இந்தியாவின் மிகவும் பணக்கார நபராக ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.
  • புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் படி, முகேஷ் அம்பானி மூன்றாவது பணக்கார ஆசியராவார்.
  • 2018-ஆம் ஆண்டிற்கான புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில், உலகினுடைய 500 பணக்கார நபர்கள் பட்டியலில் 24 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • சீனாவின் மின்-வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக்மா ஆசியாவின் முதல் பணக்கார நபராவார். இவருடைய நிகர சொத்து மதிப்பு2 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • அவரைத் தொடர்ந்து ஆசியாவின் இரண்டாவது பணக்காரராக டென்சென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான போனி மா உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு1 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • உலக அளவில் 121 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெஸோஸ் உள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரான பில்கேட்ஸ்4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு உலகளவில் இரண்டாவது இடத்திலும், 85.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து மதிப்பினைக் கொண்டு  வாரன் பப்பெட்   மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்