TNPSC Thervupettagam

புளூம்பெர்க் புத்தாக்கக் குறியீடு 2019

January 27 , 2019 2034 days 570 0
  • சமீபத்தில் 2019 ஆம் ஆண்டில் உலகின் அதிக புத்தாக்கங்களைக் கொண்ட 60 பொருளாதாரங்களின் பட்டியலான புளூம்பெர்க் புத்தாக்கக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
  • புளூம்பெர்க் புத்தாக்கக் குறியீட்டில் இந்தியா முதன்முறையாக இந்த பட்டியலில் இடம் பெற்று 54-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, வியட்நாம், பிரேசில், குவைத், கத்தார், சிலி, அர்ஜெண்டினா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் முதன்முறையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • புளூம்பெர்க் புத்தாக்கக் குறியீட்டில் தென்கொரியா 87.38 என்ற மொத்த மதிப்புடன் தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது.
  • இதற்கு அடுத்து ஜெர்மனி, பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், ஸ்வீடன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
  • 2018 ஆம் ஆண்டின் புளூம்பெர்க் புத்தாக்கக் குயியீட்டில் முதல் பத்து இடங்களில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, இந்த ஆண்டின் பட்டியலில் மீண்டும் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்