வளிமண்டலத்தில் வெப்பமான மிகக் கடுமையான ஹீலியம் நட்சத்திரத்தில் முதன்முறையாக தனித் தனியான அயனியாக்கம் கொண்ட புளோரினின் இருப்பானது கண்டறியப் பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது இந்தப் பொருட்களின் உருவாக்கமானது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஒரு வெள்ளைக் குள்ள நட்சத்திர ஹீலியம் ஆகியவை இணைவதினால் ஏற்படுகின்றது என்பதை உறுதிபடுத்துகின்றது.
இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தனிச் சுதந்திர அமைப்பான இந்திய வான் அறிவியல் மையத்தினால் மேற்கொள்ளப் பட்ட ஓர் ஆய்வாகும்.
கடுமையான ஹீலிய நட்சத்திரம் அல்லது EHe என்பது ஏறத்தாழ ஹைட்ரஜன் இல்லாத ஒரு குறைந்த நிறை கொண்ட மிகப்பெரிய பொருளாகும்.
பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான ஒரு இரசாயனப் பொருள் ஹைட்ரஜன் ஆகும்.