TNPSC Thervupettagam

புள்ளி அலகு கூழைக்கடா பறவைகள் பெருவாரியாக உயிரிழப்பு

January 31 , 2022 903 days 441 0
  • ஆந்திரப் பிரதேச மாநில வனத் துறையானது இந்திய வனவிலங்கு நிறுவனம் (டேராடூன்), பாம்பே இயற்கை வரலாற்றுச் சமூகம் மற்றும் இந்திய உயிரியல் கணக்கெடுப்பு நிறுவனம் (கொல்கத்தா) ஆகியவற்றின் நிபுணர்களை அணுகி உள்ளது.
  • ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் தெளிநீலப் புரம் எனுமிடத்தில்  அமைந்த நவ்பாடா சதுப்பு நிலப் பகுதியில் புள்ளி அலகு கூழைக்கடாப் பறவைகள் கொத்து கொத்தாக மடிவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுகிறது.
  • தெளிநீலப் புரமானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கூழைக்கடா பறவைகள், நெமட்டோட் (உருளைப்புழு) என்ற தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும், ஒரு முக்கியப் பறவைவாழ் பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்