TNPSC Thervupettagam

புள்ளியியல் அறிவியலாளர்கள் C.R.ராவ்

August 28 , 2023 309 days 233 0
  • உலகின் தலைசிறந்தப் புள்ளியியல் நிபுணர் கலியம்புடி ராதாகிருஷ்ணன் ராவ் (102) காலமானார்.
  • கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் (ISI) ஆசிரியராகப் பணி புரிந்த அவர் ஆராய்ச்சி பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
  • இந்தியாவில் தேசியப் புள்ளியியல் அமைப்புகள், புள்ளியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்திய அரசினால் அமைக்கப்பட்ட குழுக்களில் ஒரு உறுப்பினராகவும் அவர் பணியாற்றினார்.
  • மேலும் அவர்,
    • புள்ளியியல் குழுவின் தலைவராகவும் (1962-69),
    • மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான மக்கள்தொகை மற்றும் தகவல் தொடர்பு தொடர்புத் தலைவராகவும் (1968-69),
    • கணிதம் மற்றும் அணுசக்தி ஆணையம் (AEC) ஆகியவற்றிற்கான குழுக்களின் தலைவராகவும் (1969-78),
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் (COST) ஒரு உறுப்பினராகவும் (1969-71) பணியாற்றியுள்ளார்.
  • 1969 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் முறையே அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்