TNPSC Thervupettagam

புள்ளியியல் துறைக்கான சர்வதேச பரிசு

June 28 , 2023 389 days 238 0
  • பிரபல இந்திய-அமெரிக்க கணிதவியலாளரும் புள்ளியியல் நிபுணருமான கலியம்புடி ராதாகிருஷ்ண ராவ் (102) புள்ளியியல் துறையில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பரிசினைப் பெற உள்ளார்.
  • இது இத்துறையில் வழங்கப்படும் நோபல் பரிசுக்குச் சமமான பரிசாகும்.
  • 75 ஆண்டுகளுக்கு முன்பு, புள்ளி விவரங்கள் சார்ந்த கருத்தாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்திய அவரது மகத்தானப்  பணிக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • 1945 ஆம் ஆண்டில், கொல்கத்தா கணிதச் சங்கத்தின் இதழின் அறிக்கைத் தாளில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
  • அதில் அவர் நவீனப் புள்ளியியல் துறைக்கு வழி வகுத்த மூன்று அடிப்படைத் தீர்வுகளை ஒரு செயல் விளக்கம் செய்து காட்டி, இன்று அறிவியலில் பெரிதும் பயன்படுத்தப்படும் புள்ளியியல் செயற்கருவிகளை அன்றே வழங்கினார்.
  • இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
  • அவருக்கு இந்திய அரசினால் பத்ம பூஷன் (1968) மற்றும் பத்ம விபூஷன் (2001) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • புள்ளியியல் துறைக்கான முதல் சர்வதேசப் பரிசானது, 2017 ஆம் ஆண்டில் டேவிட் ஆர் காக்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்