TNPSC Thervupettagam

புள்ளியியல் துறைக்கான சர்வதேசப் பரிசு 2023

April 21 , 2023 457 days 266 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபலப் புள்ளியியல் நிபுணர் கலியம்புடி ராதா கிருஷ்ண ராவ் அவர்களுக்கு, 2023 ஆம் ஆண்டிற்கான புள்ளியியல் துறைக்கான சர்வ தேசப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இது பெரும்பாலும் புள்ளியியல் துறையின் நோபல் பரிசு என்று குறிப்பிடப்படுகிறது.
  • இந்தப் பரிசானது, ஐந்து முன்னணி சர்வதேசப் புள்ளியியல் நிறுவனங்களுக்கு இடையே உள்ள கூட்டமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று வழங்கப் படுகிறது.
  • கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் கட்டமைப்பாளர்களில் ராவ் ஒருவர் ஆவார்.
  • இவருக்கு 1968 ஆம் ஆண்டில் பத்ம பூசன் மற்றும் 2001 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள்  வழங்கப்பட்டன.
  • ராவ் 1963 ஆம் ஆண்டில், S.S. பட்நாகர் பரிசினைப் பெற்றதோடு, இவர் 1967 ஆம் ஆண்டில் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்