TNPSC Thervupettagam

‘புவனேஸ்வர் மே வைபை’ திட்டம் - ஒடிசா

November 9 , 2018 2081 days 570 0
  • ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கியை முன்னிட்டு தலைநகரத்தை முழுவதும் வை-பை பொருத்தப்பட்டுள்ள நகரமாக மாற்றுவதற்கு வேண்டி “புவனேஸ்வர் மே வைபை” என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
  • இது ஆரம்பத்தில் 275 அணுகும் மையங்களுடன் செயல்படுத்தப்பட்ட 100 ஹாட் ஸ்பாட் (Hot Spots/ தகவல் பரப்பு தளங்கள்) மையங்களைக் கொண்டிருக்கும்.
  • படிப்படியாக 1800 அணுகும் மையங்களுடன் 518 என்ற எண்ணிக்கைக்கு இந்த ஹாட் ஸ்பாட் மையங்கள் அதிகப்படுத்தப்படும்.
  • இந்த வலையமைப்பின் மூலம் அரசு சேவைகளை குடிமக்கள் அணுகும்போது அவர்களுக்கு இணைய உபயோகத்திற்காக எவ்வித கட்டணமும் கிடையாது.
  • 250 மெகா பைட் என்ற நுகர்விற்குப் பிறகு, பயனாளிகளுக்கு குறைந்த கட்டண மீள்நிரப்புதல் (Top up) திட்டங்களை அரசு கொடுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்