இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய பின்வரும் இரண்டு புவிசார் இணையதளங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘புவன் பஞ்சாயத்து (Ver. 4.0)” கிராமப்புற நிலப் பதிவுக்கான இணைய தளம் மற்றும்
"அவசரநிலை மேலாண்மைக்கான தேசிய தரவுத் தளம் (NDEM ver. 5.0)"
இந்த சமீபத்தியப் புவியிடங்காட்டி சார்ந்த கருவிகள் காட்சிப்படுத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு 1:10K அளவிலான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘புவன் பஞ்சாயத்து புவிசார் இணைய தளம்’ என்ற தளமானது, “பரவலாக்கப்பட்டத் திட்டமிடலுக்கான (SISDP) விண்வெளி சார்ந்த தகவல் ஆதரவினை” வழங்குகிறது மற்றும் பஞ்சாயத்துகளில் அடிமட்டத்தில் உள்ள குடிமக்களுக்கு அதிகாரத்தினை அளிக்கிறது.