PREVIOUS
இந்த விருதுகளை புவி அறிவியல் அமைச்சகமானது அறிவித்துள்ளது.
இந்த அமைச்சகமானது பேராசிரியர் அசோக் சாஹ்னிக்கு உயிர்ப் பாறைப்படிவியல் (பயோஸ்டிராடிகிராபி), புவியியல் (Geology) மற்றும் முதுகெலும்பு தொல்லுயிரியல் (Vertebrate Palaeontology) ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு செய்ததற்காக 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனை விருதை வழங்கியுள்ளது.
பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதானது டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தேசியக் கடல்சார் நிறுவனத்தின் ஒரு மூத்தக் கொள்கை விஞ்ஞானி ஆவார்.
கோவாவின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநர் எம்.ரவிச்சந்திரன் அவர்களுக்குக் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.