TNPSC Thervupettagam

புவி அமைப்பு அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான தேசிய விருதுகள்

August 2 , 2020 1456 days 549 0
  • இந்த விருதுகளை புவி அறிவியல் அமைச்சகமானது அறிவித்துள்ளது.

  • இந்த அமைச்சகமானது பேராசிரியர் அசோக் சாஹ்னிக்கு உயிர்ப் பாறைப்படிவியல் (பயோஸ்டிராடிகிராபி), புவியியல் (Geology) மற்றும் முதுகெலும்பு தொல்லுயிரியல் (Vertebrate Palaeontology) ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு செய்ததற்காக 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனை விருதை வழங்கியுள்ளது.

  • பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதானது டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

  • அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள தேசியக் கடல்சார் நிறுவனத்தின் ஒரு மூத்தக் கொள்கை விஞ்ஞானி ஆவார்.

  • கோவாவின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநர் எம்.ரவிச்சந்திரன் அவர்களுக்குக் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்