TNPSC Thervupettagam

புவி கண்காணிப்பின் உலகளாவிய மதிப்பைப் பெருக்குதல்

May 22 , 2024 185 days 208 0
  • உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது பல்வேறு துறைகளில் புவி கண்காணிப்பு (EO) தொழில்நுட்பங்களின் பொருளாதாரத் திறனைப் பற்றி ஆய்வு செய்கிறது.
  • புவி கண்காணிப்புத் தரவு மற்றும் தொழில்நுட்பத்தினை அதிக அளவில் ஏற்பது, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 டிரில்லியன் டாலர் வரையிலான மதிப்பினைச் சேர்ப்பதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
  • புவிக் கண்காணிப்புத் தரவுகளின் உலகளாவிய மதிப்பு ஆனது, 2030 ஆம் ஆண்டில் 266 பில்லியன் டாலரில் இருந்து 700 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • புவிக் கண்காணிப்புத் தரவு ஆனது, பசுமை இல்ல வாயு உமிழ்வினை ஆண்டுதோறும் 2.2 ஜிகா டன்கள் வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இது 476 மில்லியன் கார்களின் உமிழ்வுக்குச் சமம் ஆகும்.
  • ஆசிய பசிபிக் பிராந்தியமானது புவிக் கண்காணிப்பின் மதிப்பைக் கைப்பற்றுவதில் முன்னணியில் இருக்கும் என்பதோடு 2030 ஆம் ஆண்டில் 315 பில்லியன் டாலரினை இது எட்டும்.
  • புவிக் கண்காணிப்பு என்பது புவியின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மானுடவியல் (மனித) அமைப்புகளையும் உள்ளடக்கிய  பண்புகள் பற்றியத் தகவல்களைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்