TNPSC Thervupettagam

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் - ஹைசிஸ்

December 4 , 2018 2183 days 901 0
  • 8 நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் முதல் மேம்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோளை (HysIS - Hyper Spectral Imaging Satellite) இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • இந்த செயற்கைக் கோள்களானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோவின் செலுத்து வாகனமான PSLV C-43 மூலம் செலுத்தப்பட்டது.
  • இது இஸ்ரோவால் உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட முதல் மேம்பட்ட புவி கண்காணிப்பு முதல் ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோளாகும்.
  • PSLV C-43 என்பது 45-வது துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமாகும். மேலும் இது PSLVயின் “Core alone” பதிப்பாகும். எடுத்துக்காட்டாக மிகக்குறைந்த எடையுள்ள செலுத்து வாகனம் என்பதாகும்.
  • PSLV ஆனது திட மற்றும் திரவ எரிபொருள்களை அடுத்தடுத்து உடைய நான்கு நிலைகளைக் கொண்டது.
    • ஹைப்பர் சோனிக் இமேஜிங் - டிஜிட்டல் படமாக்கல் மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஆகியவற்றின் திறன்களை ஒன்றிணைப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்