TNPSC Thervupettagam
October 23 , 2021 1005 days 515 0
  • பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பு அறக்கட்டளை அமைப்பானது புவி காப்பாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதானது நாட்வெஸ்ட் குழுமத்தினால் நிறுவப்பட்டது.
  • பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பு அறக்கட்டளையானது வனத்துறையின் கீழ் இயங்கும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
  • இது பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் வளங்காப்பினை மேற்கொள்கிறது.
  • பரம்பிக்குளம் புலிகள் காப்பகமானது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.
  • இது 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தச் சரணாலயமானது ஆனைமலைக் குன்றுகள் மற்றும் நெல்லியம்பதி குன்றுகள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட சுங்கம் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் இவ்விருதுக்கான கருத்துருவானது "Biodiversity - a resilient nature is a foundation on which all climate mitigation and adaptation efforts must be raised" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்