புவியினைப் பாதுகாக்க வேண்டிய தேவையைப் பற்றியும், அதனுடைய சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் உலக மக்கள் அனைவரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவிதினம் (Earth Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
புவி தினமானது 1990 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தற்போது 192 நாடுகள் புவி தினத்தை கொண்டாடுகின்றன.
புவி தின பிணைய அமைப்பின் (Earth Day Network) அறிக்கைப்படி, 2018 ஆம் ஆண்டிற்கான புவி தினமானது அடிப்படையில் பிளாஸ்டிக்குகள் பற்றிய மக்களின் மனப்பான்மையையும் (attitude), பழக்க வழக்கத்தினையும் (Behavior) மாற்றுவதனை நோக்கி கவனம் செலுத்தும்
மேலும் பிளாஸ்டிக் மாசுபாட்டின் கணிசமான குறைப்பை துரிதப்படுத்துவதனை நோக்கி கவனம் செலுத்தும்.