TNPSC Thervupettagam
November 6 , 2023 238 days 330 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட (UNEP) அமைப்பானது, சமீபத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான புவி வாகையர் விருதினை அறிவித்துள்ளது.
  • இந்த விருது பெற்றவர்கள்:
    • ஜோசஃபினா பெல்மோண்டே பெல்மான்டே, பிலிப்பைன்ஸில் உள்ள கியூசான் நகரத்தின் மேயர் (கொள்கைத் தலைமைத்துவம்),
    • ஐக்கியப் பேரரசில் அமைந்துள்ள எலன் மெக்ஆர்தர் அறக்கட்டளை (உத்வேகம் மற்றும் செயல்),
    • சீனாவின் புளூ சரக்கிள் முன்னெடுப்பு (தொழில் முனைவோர் தொலைநோக்குப் பார்வை),
    • சிலி நாட்டினைச் சேர்ந்த ஜோஸ் மானுவல் மோல்லர் (தொழில் முனைவோர் தொலைநோக்குப் பார்வை) மற்றும்
    • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை (அறிவியல் மற்றும் புத்தாக்கம்)
  • ஆண்டுதோறும் வழங்கப்படும் புவி வாகையர் விருதானது, ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதாகும்.
  • 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 27 உலகத் தலைவர்கள், 70 தனிநபர்கள் மற்றும் 19 நிறுவனங்கள் உட்பட 116 நபர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்