தொழில்துறைக்கு முந்தையக் காலத்தில் இருந்த பதிவினை விட 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆண்டிற்கான சராசரி உலக வெப்பநிலையானது 1.5°C அளவினைத் தாண்டியது.
உலக வானிலை அமைப்பின் (WMO) மதிப்பீடு ஆனது, 1850 முதல் 1900 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டமானது தொழில்துறைக்கு முந்தைய அடிப்படை பதிவினை வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், ஆறு தரவுத் தொகுப்புகளிலிருந்து பெறப்பட்ட சராசரி உலக வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஒவ்வொரு மாதமும் அந்த மாதங்களில் இது வரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான மாதங்களாக இருந்தன.
ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை, ஆகஸ்ட் மாதம் தவிர, ஒவ்வொரு மாதமும் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது வெப்பமான மாதமாக இருந்தது.
சராசரி உலக வெப்பநிலையான 15.1 டிகிரி செல்சியஸ் ஆனது - 1991-2020 என்ற காலக் கட்டத்தின் சராசரியை விட 0.72 டிகிரி அதிகமாகவும், முந்தைய அதிகளவு வெப்ப நிலையாக பதிவான 2023 ஆம் ஆண்டிற்கான பதிவினை விட 0.12 டிகிரி அதிகமாகவும் இருந்தது.