TNPSC Thervupettagam

புவி வெப்பமடைதல் வரம்பு மீறப்பட்ட முதல் ஆண்டு

January 14 , 2025 8 days 43 0
  • தொழில்துறைக்கு முந்தையக் காலத்தில் இருந்த பதிவினை விட 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆண்டிற்கான சராசரி உலக வெப்பநிலையானது 1.5°C அளவினைத் தாண்டியது.
  • உலக வானிலை அமைப்பின் (WMO) மதிப்பீடு ஆனது, 1850 முதல் 1900 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டமானது தொழில்துறைக்கு முந்தைய அடிப்படை பதிவினை வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், ஆறு தரவுத் தொகுப்புகளிலிருந்து பெறப்பட்ட சராசரி உலக வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஒவ்வொரு மாதமும் அந்த மாதங்களில் இது வரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான மாதங்களாக இருந்தன.
  • ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை, ஆகஸ்ட் மாதம் தவிர, ஒவ்வொரு மாதமும் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது வெப்பமான மாதமாக இருந்தது.
  • சராசரி உலக வெப்பநிலையான 15.1 டிகிரி செல்சியஸ் ஆனது - 1991-2020 என்ற காலக் கட்டத்தின் சராசரியை விட 0.72 டிகிரி அதிகமாகவும், முந்தைய அதிகளவு வெப்ப நிலையாக பதிவான 2023 ஆம் ஆண்டிற்கான பதிவினை விட 0.12 டிகிரி அதிகமாகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்