TNPSC Thervupettagam

புவிக் காந்த Pc1 முத்துவடிவ அலைவுகள்

May 6 , 2023 571 days 276 0
  • புவிக் காந்த Pc1 முத்துவடிவ அலைவுகள் என்பது வீச்சு-பண்பேற்றப்பட்ட வடிவிலான குறுகிய-பட்டை சமிக்ஞைகள் ஆகும்.
  • அவை பூமியின் காந்த மண்டலத்தில் உள்ள எதிரொலிப்பு அலை-துகள் தொடர்புகளால் உருவாக்கப் பட்ட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அயனி சைக்ளோட்ரான் அலைகள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும்.
  • இந்த அலைவுகளின் மீதான ஆய்வானது, பூமியின் காந்த மண்டலத்தில் உள்ள துகள் படிவுகளை அளவிடுவதற்கான ஒரு மாற்று ஆகும்.
  • இந்த அலைவுகளுக்கானச் சான்றுகள் மத்திய மற்றும் உயர்-அட்சரேகைப் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.
  • மிக தாழ்மட்ட அட்சரேகைப் பகுதிகளில் அடிக்கடி பதிவாவதில்லை.
  • இந்த அலைகள் பூமிக்கு அருகிலுள்ள சூழலில் உள்ள விண்வெளி சார் வானிலையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
  • சூரியனின் அதிகபட்ச இயக்க சுழற்சி காலத்தில் பூமத்திய ரேகைக்கான Pc1 என்ற அலைகளின் பரிமாற்ற வீதமானது சூரியனின் குறைந்தபட்ச இயக்க சுழற்சி காலத்தை விட குறைந்தது.
  • Pc1 அலைவுகளின் உருவாக்கத்தின் வருடாந்திர மற்றும் பருவகால வடிவங்கள் ஆனது, இந்த இரு பகுதிகளிலும் சூரிய செறிவுப் புள்ளிகளின் எண்ணிக்கையுடன் நேர்மாறான தொடர்பினைக் கொண்டுள்ளன.
  • செயலில் உள்ள புவிக் காந்த நிலைகளுடனான இந்த அலைவுகளின் ஒரு தொடர்பானது, புவிக் காந்தப் புயல்களின் மீட்சி நிலைக் கட்டத்தில் Pc1 அலைவுகளின் நிகழ்வானது கணிசமாக அதிகரிப்பதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்