புவிக் காந்த Pc1 முத்துவடிவ அலைவுகள் என்பது வீச்சு-பண்பேற்றப்பட்ட வடிவிலான குறுகிய-பட்டை சமிக்ஞைகள் ஆகும்.
அவை பூமியின் காந்த மண்டலத்தில் உள்ள எதிரொலிப்பு அலை-துகள் தொடர்புகளால் உருவாக்கப் பட்ட குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அயனி சைக்ளோட்ரான் அலைகள் இருப்பதற்கான அடையாளங்கள் ஆகும்.
இந்த அலைவுகளின் மீதான ஆய்வானது, பூமியின் காந்த மண்டலத்தில் உள்ள துகள் படிவுகளை அளவிடுவதற்கான ஒரு மாற்று ஆகும்.
இந்த அலைவுகளுக்கானச் சான்றுகள் மத்திய மற்றும் உயர்-அட்சரேகைப் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.
மிக தாழ்மட்ட அட்சரேகைப் பகுதிகளில் அடிக்கடி பதிவாவதில்லை.
இந்த அலைகள் பூமிக்கு அருகிலுள்ள சூழலில் உள்ள விண்வெளி சார் வானிலையின் ஒரு முக்கிய அங்கமாகும்.
சூரியனின் அதிகபட்ச இயக்க சுழற்சி காலத்தில் பூமத்திய ரேகைக்கான Pc1 என்ற அலைகளின் பரிமாற்ற வீதமானது சூரியனின் குறைந்தபட்ச இயக்க சுழற்சி காலத்தை விட குறைந்தது.
Pc1 அலைவுகளின் உருவாக்கத்தின் வருடாந்திர மற்றும் பருவகால வடிவங்கள் ஆனது, இந்த இரு பகுதிகளிலும் சூரிய செறிவுப் புள்ளிகளின் எண்ணிக்கையுடன் நேர்மாறான தொடர்பினைக் கொண்டுள்ளன.
செயலில் உள்ள புவிக் காந்த நிலைகளுடனான இந்த அலைவுகளின் ஒரு தொடர்பானது, புவிக் காந்தப் புயல்களின் மீட்சி நிலைக் கட்டத்தில் Pc1 அலைவுகளின் நிகழ்வானது கணிசமாக அதிகரிப்பதைக் காட்டுகிறது.