மனிதனால் ஏற்படும் மாசு மற்றும் இயற்கை உலகின் அழிவு காரணமாக ஒன்பது புவிக் கிரக எல்லைகளில் ஆறு மீறப்பட்டுள்ளன.
புவிக் கிரக எல்லைகள் என்பது அறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் தொகுப்பாகும் என்ற நிலையில், இந்தக் கட்டமைப்பிற்குள் மனிதகுலம் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலும் என்பதோடு அது தலைமுறை தலைமுறையாகச் செழித்து வளர முடியும்.
இந்த ஒன்பது புவிக் கிரக எல்லைகள் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 29 அறிவியலாளர்கள் குழுவால் முன்மொழியப் பட்டது.
நம்மால் இந்த ஒன்பது காரணிகளை சரியாக கையாள முடிந்தால், பூமி குறிப்பிட்ட அளவில் பாதுகாப்பானதாக இருக்கும்.