TNPSC Thervupettagam

புவிக்கு அருகில் உள்ள குறுங்கோள் சாரண விண்கலம்

July 26 , 2021 1127 days 498 0
  • நாசா தனது புதிய விண்கலத்தைப் பற்றி அறிவித்துள்ளது.
  • இது ஒரு காலணிப் பெட்டகத்தின் அளவை ஒத்த (அ) அதை விட சிறிய  ஒரு விண்கலம் ஆகும்.
  • இது கியூப்சாட் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது புவிக்கு அருகிலுள்ள ஒரு குறுங்கோள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கான ஒரு முதன்மைத்  திட்டம் ஆகும்.
  • இது ஆர்டிமிஸ் I என்பதன் மூலம் பயணிக்கும் பல விண்வெளிப் பொருட்களில் ஒன்றாகும்.
  • இது சூரிய ஆற்றலின் சிறப்பு உந்து சக்தியைப் பயன்படுத்தி செயல்படச் செய்யும் அமெரிக்காவின் முதலாவது கோள்களுக்கிடையேயான திட்டமாகும்.
  • இலக்காக நிர்ணயிக்கப்பட்ட குறுங்கோளை இந்த விண்கலம் சென்றடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.
  • இந்த விண்கலமானது அந்த குறுங்கோளைச் சென்றடைய வேண்டி பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பயணிக்க உள்ளது.
  • ஆர்டிமிஸ் I என்பது SLS ஏவுகணை மற்றும் ஓரியான் விண்கலத்திற்கான விண்வெளி வீரர்களற்ற ஒரு சோதனைக் கலமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டில் நிலவில் முதல்முறையாக ஒரு பெண்மணியைத் தரையிறங்கச் செய்வதற்கு நாசா விண்வெளி நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்