இந்திய அரசின் புவிசார் குறியீட்டு பதிவேட்டு அலுவலகம் நாகர்கோவில் கோவில் நகைகளுக்கு அதிகாரப்பூர்வ சான்றிதழை அளித்துள்ளது.
இந்த நகையை உருவாக்குவதில் குச்சுக் கல் என்றழைக்கப்படும் ஒரு வித்தியாசமான சிவப்பு மற்றும் பச்சைக்கல் உபயோகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கோவில் நகை 9வது நூற்றாண்டில் சோழர் வம்சத்து ஆட்சிக் காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
இந்த பாரம்பரியமான நகை மதிப்புமிக்க பல ரத்தினங்கள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தாலானது. மேலும் இது பாரம்பரியமான நடனக் கலைஞர்களால் உபயோகிக்கப்படும் அளவிற்கு அதிகாரப்பூர்வமான ஒன்றாகும்.