கேரளாவைச் சேர்ந்த 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
இவை அட்டப்பாடி ஆட்டுக்கொம்பு அவரை, அட்டப்பாடி துவரை, ஓநாட்டுக்கரா எள்ளு, காந்தளூர்-வட்டவடா வெளுத்துள்ளி மற்றும் கொடுங்கல்லூர் பொட்டுவெள்ளரி ஆகியனவாகும்.
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக புவிசார் குறியீடுகளைக் கொண்ட மாநிலங்களாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கேரளா (35), உத்தரப் பிரதேசம் (34), மற்றும் மகாராஷ்டிரா (31) ஆகியவை உள்ளன.